

இந்திய தேசிய விளையாட்டு தினம்
About this episode
இந்திய தேசிய விளையாட்டு தினம் 2012-ஆண்டு முதன் முதலாக தேசிய விளையாட்டு தினமாக ஆகஸ்ட் 29-ஆம் நாளை இந்தியஅரசு அறிவித்தது. ஹாக்கி விளையாட்டின் பிதாமகனாக அறியப்படும் மேஜர்.தயான் சந்த் அவர்களின் திறனை பெருமைப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1905 ஆகஸ்ட் 29 அன்று அலகாபாத்தில் பிறந்த இவர். தன்னுடைய 16-வயதில் இந்திய இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் ஹாக்கி விளையாட்டில் பயிற்சி பெற்று ஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். 1928, 1932,1936 என ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்ல காரணமாய் இருந்தவர் இவரே. களம் கண்ட காலங்களில் 400 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். 30 ஆண்டுகள் விளையாடிய மேஜர்.தயான்சந்த் 1949-ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கி போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்திய உயரிய விருதுகளில் பத்மபூ~ன் விருது 1956ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.பின்னாளில் விளையாட்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, இவரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது. • வுpளையாட்டு விருதுகளான • தயான்சந்த் விருது • ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது • அர்ஜீனா விருது • துரோணாசார்யா விருது ஏன அனைத்து விருதுகளும், குடியரசு தலைவரால் தேசிய விளையாட்டு தினத்தில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக காணொளி வாயிலாக விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஹிட்லர் தன் இராணுவத்தில் உயர் பதவியில் இணைந்து கொள்ள அழைத்தபோது, நான் ஒரு ஹாக்கிவீரன் தான். ஆனால் அதற்கு முன்பிருந்தே ஒரு இந்திய ராணுவவீரன் எனக்கூறிய மேஜர்.திரு. தயான்சந்த் அவர்களை இந்நாளில் நினைவுகூர்வோம்
Comments
Rate this episode
Episode Details
- Author
- Pasumai Community Radio
- Show Type
- full
- Audio Format
- audio/x-m4a