நமது பசுமை வானொலி இயக்குனர் திரு.ஜே.பால்பாஸ்கர் அவர்கள், நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, விண்ணில் ஓய்வெடுக்கும் அவர்களுக்கான நினைவலைகள்!
Pasumai 90.4, Community Radio, Dindigul, Tamil Nadu.

நமது பசுமை வானொலி இயக்குனர் திரு.ஜே.பால்பாஸ்கர் அவர்கள், நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, விண்ணில் ஓய்வெடுக்கும் அவர்களுக்கான நினைவலைகள்!

Aug 27, 2020
46:28
-(0)

About this episode

பசுமை வானொலி 90.4. உங்கள் முன்னேற்றத்திற்கான வானொலி. நமது பசுமை வானொலி இயக்குனர் திரு.ஜே.பால்பாஸ்கர் அவர்கள், அமைதி அறக்கட்டளை நிறுவனர், அமைதி கல்வியியல் கல்லூரி மற்றும் அமைதி தொழிற்பள்ளியின் தாளாளர் என பன்முகத்திறன் கொண்டு மண்ணில் பல மாற்றங்களை நிகழ்த்தி, இன்று(20.08.2020) நம்மை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, விண்ணில் ஓய்வெடுக்கும் சுற்றுச்சூழல் போராளி நமது இயக்குநர் ஐயா அவர்களுக்கான நினைவலைகள் (நன்றி: கோடை பண்பலை 100.5) வாழ்ந்தவர்களுக்குத்தான் இறப்பு.. வாழ வைத்தவர்களுக்கில்லை.. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற அப்துல்கலாம் ஐயா அவர்களின் வரிகளை நினைவுப்படுத்துகிறது எமது பசுமை வானொலி இயக்குநர் அவர்களின் இழப்பு. அவர் வழிநின்று, அவர்விரும்பிய சுற்றுச்சூழல் மேம்பாடு, இளைஞர் நலன், குழந்தைத்தொழில் மற்றும் கொத்தடிமை முறை ஒழிப்பு, பெண்கல்வி மற்றும் பணிப்பாதுகாப்பு, இயற்கை விவசாயமுறை, புலம்பெயர் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாடு என புத்துலகம் படைப்போம். மக்கள் நலனுக்காக, உலகம் சுற்றிய திண்டுக்கல் மண்ணின்மைந்தர் ஐயா, நீங்கள் இம்மண்ணில் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டு இருக்கிறீர்கள்! விதை மரமாகி விருட்சமாகும்! விட்டுச் சென்ற உங்கள் பணியை என்றும் நாங்கள் முன்னெடுப்போம்... ‘மனிதர்களை நேசிப்போம். புத்தகங்களை வாசிப்போம் மனிதம் காப்போம்’

Comments

Rate this episode

Episode Details

Author
Pasumai Community Radio
Show Type
full
Audio Format
audio/mpeg

We use analytics

We use Umami, a privacy-friendly analytics tool, to understand how visitors use this site. No personal data is collected and no data leaves our EU servers. You can accept or decline below. Privacy Policy